விடுதலை சிறுத்தைகள் கட்சி சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்களை. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர். தொல். திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளராக ரத்தின நற்குமரன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சோளிங்கர் தனியார் மண்டபத்தில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
மண்டல செயலாளர். தமிழ்மாறன் தலைமை தாங்கி நடைபெற்ற இந்த அறிமுக கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர். பொது நிலவன், மாநில அமைப்பு செயலாளர். நீல. சந்திரகுமார் , மாநில செயலாளர். இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை போளூர். செல்வம் , மாநில செயலாளர். பெல் இந்திரன், மாநில செயலாளர். அன்பரசி பிரபாகரன் , மண்டல துணை செயலாளர். வெற்றி வளவன், முன்னாள் மாவட்ட செயலாளர். கௌதம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து சட்டமன்ற நிர்வாகிகளை அறிவோம் செய்து வைத்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள். உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர் இறுதியில் ஒன்றிய செயலாளர் கவியரசு நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக