புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பழங்குடி இன மக்களோடு கொண்டாடிய பொங்கல் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடி இன மக்களோடு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இங்கு 200 குடும்பங்கள் வசிக்கின்றனர். சுமார் 500 நபர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பொங்கல் மற்றும் புளிசாதம் கரும்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் நடனம் ஆடியும் பாட்டு பாடியும் அமைச்சர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு பாரம்பரிய பாசிகள் அணிவித்து மகிழ்ந்தனர். தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாதது மற்றும் வீடுகளுக்கு பட்டா வழங்கவேண்டியும் மனு கொடுத்தும், கோரிக்கை வைத்தும் பேசினர். நிகழ்ச்சிகளை புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்து இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக