திமுக கழக இளைஞரணி சந்திப்பு!!
விருதுநகர் மாவட்டம்,வெற்றி வசமாகும் வரை ஓய்வை மறந்து உழைக்க வேண்டும் என்ற திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று, களமாடி வரும் கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, வருகிற பிப்ரவரி-7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறுகிறது.
இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற, தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள்-மாவட்டக் கழகச் செயலாளர்கள்- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்- மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆகியோரை அன்பகத்தில் சந்தித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
தென் மண்டலத்தில் கழகத்தின் வலிமையை வநிரூபிக்கும் வகையில், விருதுநகரில் இந்த இளம் நிர்வாகிகள் சந்திப்பு, நிச்சயம் அமையும்!
வெல்வோம்_ஒன்றாக!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக