திருமயம்: சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டம்!!
புதுக்கோட்டைமாவட்டம்,திருமயம்,சண்முக நாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டின் 77 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக இன்று ( 26-1-2026) நடைபெற்றது.
கல்லூரி தேசிய மாணவர் படையின் அணிவகுப்புடன் கல்லூரி செயலர் மு.விஸ்வநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர். குழ.முத்துராமு குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார்.
நிறைவாக இயந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் மோகன் நன்றி கூறினார்.இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக