அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் டாக்டர். சிவாக்குமர் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா!!
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக கழகத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். P சிவக்குமார் மற்றும் மாநில துணைத்தலைவர். வழக்கறிஞர். P.சதீஷ் ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி ஸ்மைல் முதியோர் இல்லத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் முதியோர்களுக்கு புத்தாடையும், மதிய உணவும் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் கழகத்தின் மாநகர தலைவர் நாராயணன், மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக