தேனியில் தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரசு பொறியியல் துறைகளை மேம்படுத்த பொறியியல் சீராய்வு குழு அமைத்திட வேண்டும் ,பொறியாளர்களின் பதவி உயர்வு குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும், ,பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு வழங்கிட 04.0 4. 2024 சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில் 21 க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!