கடலூரில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை!!

கடலூர் மாவட்டம், பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி மற்றும் உச்சிமேடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு கிராமங்கள் சார்பாக சாலை மறியல் செய்வதாக கடலூர் விசிக ஒன்றிய பொருளாளர். சம்பத் அவர்கள் அறிவிப்பு செய்திருந்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் கடலூர் வட்டாட்சியர் மற்றும் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் ஆகியோர்  தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு இன்று ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்த சமாதான கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர். பா.தாமரைச்செல்வன் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் ஒன்று இரண்டு கோரிக்கைகள் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி கூறியுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மாநிலத் துணைச் செயலாளர். தமிழரசன், மணிகண்டன், திவாகர், பிரேம், மஞ்சினி செந்தில், ராஜேஷ், உத்திரவேல், செல்வராஜ், அய்யனாரப்பன்  உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!