நெமிலியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஒன்றிய செயலாளர். எஸ். மணிவண்ணன் தலைமையில் திமுக கழக கொடி மற்றும் கருப்பு சிவப்பு நிற பலன்களை மாட்டு வண்டிகளில் பறக்கவிட்டு ஊர்வலம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி நெமிலி அடுத்த அச நெல்லிக்குப்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நெமிலி வடக்கு ஒன்று திமுக சார்பில் திமுக கழக கொடி மற்றும் கருப்பு சிவப்பு நிற பலூன்களை மாடுகளுக்கும், மாட்டு வண்டி களுக்கும் கட்டி
வண்டியை வண்ண விளக்குகளுடன் அலங்கரித்து நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக அழைத்து வந்தது மாட்டுப் பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இதனை பொதுமக்கள் கண்கொள்ளா காட்சியாக கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்வில் கிளை செயலாளர். ரவி திமுக கழக நிர்வாகி. ஜெயராஜ் மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக