எஸ்.கே.பாளையம் ஸ்ரீ பாலவிநாயகர்,ஸ்ரீ ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு மதுரா, எஸ்.கே. பாளையம் தோப்புத் தெரு ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீதட்சணாமூர்த்தி, ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன
மஹாகும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாகமங்கல இசை, கணபதி பூஜை புன்யாவாசணம், கோபூஜை. ரக்ஷாபந்தனம் நாடி சந்தானம், தத்துவார்சனை ஸ்பர்சாகுதி நாமகரணம்,
2-ம் கால பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி விமானம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டுமஹா கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர்பக்தர்களுக்குஅன்னதானம்வழங்கப்பட்டது. எஸ்.கே. பாளையம்,கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக