மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் பங்கேற்று சிறப்புரை!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்தப்பன்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட ஒன்றிய நகர பகுதி மற்றும் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், கழக இளைஞரணி துணை செயலாளர், வாரிய தலைவர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படிதி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலம் தொகுதி முத்தப்பன்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இளையராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்புரையாற்றிதாவது:
விருதுநகரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது இளைஞர்களின் படை திமுகவில் தான் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேண்டும் விருதுநகர் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைய இளைஞரணி உறுதுணையாக இருக்க வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் செய்திருந்தார் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆதவன் அதியமான் சாதிக் ஜெகதீஷ் ராஜதுரை ஜெகநாதன் காளிதாஸ் சுரேஷ் தொகுதி பொறுப்பாளர் டிஸ்கோ அலாவுதீன் ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார் நாகராஜன் பாண்டியன் தனசேகரன் ஆலம்பட்டி சண்முகம் தங்கபாண்டியன் நகர செயலாளர் ஸ்ரீதர் தங்கப்பாண்டியன் மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஜெயச்சந்திரன், பாண்டிமுருகன், ஞானசேகரன், கட்சி நிர்வாகிகள் உசிலை சிவா பேரூர் கழகச் செயலாளர்கள் வருசை முகமது, ஜெயராமன் உள்ளிட்ட இளைஞர் அணி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக