மதுரை நேதாஜி சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு மாலையிட்டு தமிழ்ச்செம்மல் கவிஞர். இரா.இரவி சிறப்புரை!!

மதுரை நேதாஜி சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு பிறந்த நாளை முன்னிட்டு மாலையிட்டு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி உரையாற்றினார்.உடன் தேசியவலிமை வே.சுவாமிநாதன், சத்திரப்பட்டி இராஜா பங்கேற்பு!

மாவீரன்  நேதாஜி வாழ்க!வாழ்க!!

 கவிஞர் இரா .இரவி:     

வெள்ளையர்களை ஓட! ஓட!!

விரட்டியதில் பெரும் பங்கு வகித்தார் நீ!

அடிக்கு அடி என அடி மேல்

அடித்த அசகாய சூரன் நீ!

உனது பெயரை உச்சரித்தாலே

உச்சரித்தவர்களுக்கு வீரம் பிறக்கும்

உலக மனிதர்கள் யாவரும் சமம் ஆண்டான் அடிமை இல்லை  அறிவித்தவர் நீ!

ஆணவக்காரகளின் ஆணவத்தை

அடித்து நொறுக்கிய வீரன் நீ!

துப்பாக்கி யார் சுட்டாலும்

சுடும் என்று உணர்த்தியவர் நீ!

ஆயுதம் ஏந்திய அறிவிலிகளுக்கு

ஆயுதத்தால் தக்க பதில் தந்தவர் நீ!

கொட்டக்! கொட்டக்!! குனிந்தது போதும்

கொட்டிய கரங்களை முறித்தவர் நீ!

நீ இறந்து விட்டதாக யார் ?சொன்னது

மாவீரர்களின் இதயத்தில் என்றும் வாழ்கிறாய் நீ!

தைய்வான் நாட்டில் விமான விபத்தில் நீ

இறந்து விட்டதாகக் கதை கட்டினார்கள்

தைய்வான்  நாடோ விமான விபத்து

நடக்கவே இல்லை என்று அறிவித்தது.

இந்தியாவின் விடுதலைக்காக முதன்முதலில்

இந்திய ராணுவம் அமைத்தவர் நீ!

பெண்ணுரிமை பற்றி பேசுகின்றோம் இன்று!

பெண்களைப் படையில் சேர்த்தாய் அன்று!

உலகில் எந்த மூலையில் ஆதிக்கம் நடந்தாலும்;

உலகப் போராளிகளின் தலைவன் நீ!

வெள்ளையனே வெளியேறு என்றாய் அன்று!

வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசுகின்றனர் இன்று!

தமிழரின் வீரம் அறிந்து படையில் சேர்த்தாய் அன்று.  அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க ஆசைப்பட்டவர் நேதாஜி.தமிழராகப் பிறந்ததற்கு பெருமை  கொள்வோம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!