மக்கள் சமூக நீதி பேரவை, சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு குழு இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம்,மக்கள் சமூகநீதி பேரவை சார்பாக வேப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13.01.2026 அன்று நடந்தது. குரும்பகவுண்டர் சமூகத்தையும், அதன் தலைவர் R.கிருஷ்ணசாமியையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் Whatsapp-Audio பதிவினை வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், இரு சமூகங்களுக்கு மத்தியில் கலவரத்தை தூண்டிய குற்றசெயலுக்காக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி 10 மேற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால், கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கும். நடவடிக்கை இல்லை என்பதால், வேப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைமையாக மக்கள் சமூகநீதிபேரவை மாவட்ட செயலாளர். பிரபு. முன்னிலையாக மாநில செய்தி தொடர்பாளர். சந்திரசேகர், அயலக அணி தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில தலைவர். கோபால், மாநில பொருளாளர். சுமதி, கரூர் மாவட்ட செயலாளர். சண்முகம், திருச்சி மாவட்ட செயலாளர். பிச்சைவேல், ஒன்றிய செயலாளர். அஜய் மற்றும் கடலும் மாவட்ட குரும்பகவுண்டர் சமூக நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக