ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம், NDPS சட்டம் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 30 வாகனங்கள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 27 வாகனங்கள்  பொது ஏலம் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில், வேலூர் சரக போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினரால் போதைப்பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 30 வாகனங்களில்அதில் 03 நான்கு சக்கர வாகனங்களும், 27 இரண்டு சக்கர வாகனங்களும், *மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1 நான்கு சக்கர வாகனங்களும், 26 இரண்டு சக்கர வாகனங்களும், மொத்த *27 வாகனங்களும்* கைப்பற்றப்பட்டு, ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேற்படி வாகனங்கள் நாளை 12.01.2026 தேதியன்று, ஆயுதப்படை மைதானத்தில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை 12.01.2026 காலை 0800 மணி முதல் பிற்பகல் 1200 மணிவரை மேற்படி வாகனங்களை பார்வையிட்டு ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000/-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000/-ம் ஆயுதப்படை வளாகத்தில் செலுத்தி பிற்பகல் 0200 மணிக்கு நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு, அதிகபட்சமாக ஏலம் கோருவோருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!