சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக மாணவிகளுக்கு வாழ்த்து!!
தேனி மாவட்டத்தில் சர்வதேச கிக் பாக்சிங்கிற்க்கு தகுதி பெற்ற தமிழக மாணவர்களை தேனி மாவட்ட கிக்பாக்ஸிங் சங்கம் நேரில் அழைத்து வாழ்த்து .டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டிக்கு தகுதி பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த கிக் பாக்ஸிங் சங்கம் பாராட்டு விழா நடத்தியது .அடுத்த நான்கு முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் இவர்கள் பங்கேற்பார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கன்னியப்ப பிள்ளைபட்டியில் திரு. துரைமுருகன் பயிற்சியாளரிடம் அமெச்சூர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவிகள் சர்வதேச போட்டிக்கு தேர்வானது தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக