உத்தமபாளையம் அரசு உதவி பெறும் ஹாஜி கர்த்தராவுத்தர் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இலவச யோகா பயிற்சி முகாம்!!

தேனி மாவட்டம்,நாகரிக உலகில்  கல்லூரி மாணவ, மாணவிகள் உடலும் உள்ளமும் நோயிற்று வாழவும் யோகாவின் பயன்களை எடுத்துரைக்கும் விதமாகவும் பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் ஆரோக்கியம் பேணவும் அன்றாட வேலை செய்யக்கூடிய பொது மக்களுக்கு யோகாவின் நன்மைகள் பயன்கள் குறித்து எடுத்துரைக்கவும் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு உதவி பெறும் ஹாஜி கர்த்தராவுத்தர் கல்லூரியில் நலம் நாடி என்ற தலைப்பில் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் உத்தமபாளையம் யோகா மாஸ்டர் ஸ்ரீதா பங்கேற்று பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் யோகாவின் நன்மைகள் பயன்கள் உடலும் உள்ளமும் எவ்வாறு ஒருநிலைப்படுத்துவது யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கி உடல் மொழியில் பயிற்சி வகுப்புகள் எடுத்தார்.

உத்தம பாளையத்தில் இயங்கி வரும் ஸ்ரீ யோகா சென்டர் மூலமாக இந்த இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகண்டு  யோகா யாசனங்களை இந்த யோகாசனம் ஆனது தமிழ்நாட்டில் த்ரீ சக்கர வியூவில் படிகள் மேல் செய்யப்பட்டது. 

இந்த யோகாசனத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட யாசனங்களை கற்றுக் கொடுத்த யோகா ஆசான் ஸ்ரீதா யோகாவில் ஒவ்வொரு யாசனத்திற்கும் ஒவ்வொரு பயிற்சிகளை எடுத்துக்கொண்டு மனதும் உள்ளமும் ஒருநிலை படுத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு பொதுமக்களுக்கும் எடுத்துரைத்து அதனை செய்து காட்டி விளக்கினார்.

இதில் பள்ளி குழந்தை தங்களது ஆசான் கற்றுக் கொடுத்த யாசனங்களை மாணவ மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தத்ரூபமாக யோகாசனம் செய்து காட்டி அதன்படி அவர்களுக்கு பயிற்சி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து இன்றைய நவ நாக நாகரீக உலகின் கல்லூரி மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாகி தங்களது மனதை ஆபாச படங்களுக்கும் காதல் என்ற மன நோய்க்கும் ஆளாகி வருவதை தடுக்கும் விதமாகவும் இந்த யோகாசன சிறப்பு வாய்ந்ததாக அமைந்ததாகவும் தெரிவித்தனர். 

தொடர்ந்து யோகாவில் உள்ள ஒவ்வொரு யாசனங்களும் கற்றுக்கொண்டு வரும் காலங்களில் இலவசமாக ஸ்ரீ யோகா சென்டர் மூலமாக தேனி மாவட்டம் முழுவதும் கற்றுத் தரப்படும் என்று  பேட்டியளித்தார்.

தொடர்ந்து இந்த யோகாசன பயிற்சியின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் யோகா பயிற்சியை மேற்கொண்டு தங்களது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு வழி வேலை செய்வதற்கு சிறந்த உதாரணம் என்று தெரிவித்து தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபடுவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

உத்தமபாளையம் ஹாஜி கர்த்தராவுத்தர் கெளதிய கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி உடற்கல்வி பேராசிரியர் பயிற்சி முகாம். அக்பர் அலி சிறப்புரையாற்றி  கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் சான்றிதழ் வழங்கினார்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!