நெமிலியில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விக்சித் பாரத் ரோஜ்கர் அஜிவிகா விஷன் நகலை மாநில தழுவிய கிழித்தெரியும் போராட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விக்சித் பாரத் ரோஜ்கர் அஜிவிகா விஷன் திட்டத்தை கண்டித்து நகலை மாநில தழுவிய கிழித்தெரியும் போராட்டம் நடைபெற்றது. 


கோரிக்கைகள்:

1.மாற்றுத்திறனாளிகளாகிய நாம் உள்ளிட்டு கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை ஒன்றிய அரசு முற்றிலும் ஒழித்து கட்டும் விதமாக சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

2.கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பு திட்டமாக 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் தொடக்கத்தில் 100 நாள் 80 ரூபாய் ஊதியம் என்றத்திலிருந்து தற்போது 336 ரூபாய் தினக்கூலி கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள் பெண்கள் பயனடைந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைத்து வந்தது. 

3.ஒன்றிய மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கி வந்த நிதியை படிப்படியாக குறைத்து வந்தது தற்பொழுது இத்திட்டத்தை சட்டத்திருத்தம் செய்து விபிஜி ராம் ( VPG RAM2025) என்ற புதிய சட்டத்தை டிசம்பர் 17 நள்ளிரவில் நிறைவேற்றியுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை கேட்தபது, தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை.

இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட துணை அமைப்பாளரும், நெமிலி ஒன்றிய துணை தலைவருமான. எஸ். பூங்காவனம் தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளரும், நெமிலி ஒன்றிய செயலாளருமான ச. ஏகாம்பரம் வரவேற்புரை, நெமிலி ஒன்றிய தலைவர். சுசிலா, நெமிலி ஒன்றிய கவுரவத்தலைவர். எம். தாமோதரன், நெமிலி ஒன்றிய துணை செயலாளர். புவனேஸ்வரி, ராணிப்பேட்டை மாவட்ட துணை அமைப்பாளர். சதீஷ்குமார், நெமிலி ஒன்றிய துணை செயலாளர்.பி. வினோத், நெமிலி ஒன்றிய பொருளாளர்.எஸ். கோபி, நெமிலி ஒன்றிய குழு உறுப்பினர். கே. பாபு, வேட்டாங்குளம் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிஐடியு விசைத்தறி சங்க மாநில செயலாளர் ஆர். வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விக்சித் பாரத் ரோஜ்கர் அஜிவிகா விஷன் திட்டத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அதன் நகலை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!