மதுரை ஐக்கிய கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா!!


மதுரை மாநகரின் மிகவும் பாரம்பரியமான ஒரு பள்ளியான ஐக்கிய கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி பெரியார் நிலையம் அருகில் உள்ள பள்ளி 143 வருடம் பழமை வாய்ந்தது இந்த பள்ளியின் பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. 

மனமகிழ்ச்சி விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழாக்கள் முதலியவை சிறப்பு பெற்றது என்றாலும் மாணவர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களில் தங்கள் பெயர்களை விழா அரங்கில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் எழுதி ஒருவருக்கு ஒருவர் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர் விழாவின் பேருரையாக 'தமிழியும் தொன்மை இலக்கியமும் நம் மதுரையின் பெருமை' என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர் பொருளாதாரம் திரு டி மணிமுத்து அவர்கள் சிறப்புடன் பேசினார்கள் பள்ளியின் தலைமையாசிரியர் பாபுசாமி கமலாகரன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் ஏனைய ஆசிரியர்கள் எட்வின் ராஜ்குமார், சுரேஷ் ஜோசப் சுந்தர் சிங், கிருபாகரன், மணியரசன், மனோ லி ராஜன், பிரபாவதி, ஜெசி,ஜெயக்குமார் போன்றோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!