தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்!!

தேனி மாவட்டம்,தமிழக முதல்வர் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடங்கி வைத்ததை தொடர்ந்து முத்துலாபுரம் ரேசன் கடையில் பொது மக்களுக்கு ரூபாய் 3000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 3000 ரூபாயும், கரும்பு,பச்சரிசி மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க உத்தரவிட்டார் அதன் பெயரில் இன்று தமிழக முழுவதும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகையும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் பொது மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.மாவட்ட திமுக துணைச் செயலாளர். ஈஸ்வரி பிச்சை முத்தலாபுரம்,கிளை செயலாளர். முருகன் பரமத்ததேவன்பட்டி,கிளைச் செயலாளர். பிச்சை நியாய விலை கடை பணியாளர். சேதுராம் ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசு தொகை வழங்கினார்கள்.

தமிழக முதல்வர் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தவுடன் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!