அமைச்சர். ஆர். காந்திக்கு நாள்காட்டி வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜி.சி பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், 2026 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களை நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் நேரில் சந்தித்து 2026- ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி வழங்கி புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.
அதனைத்தொடர்ந்து திமுக கழக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து, நாள்காட்டி வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள். அ. சீனிவாசன், வழக்கறிஞர் M. தமின் அன்சாரி. S. சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள். C. G. சண்முகம், தனசேகரன், K.சுரேஷ், அகவலம் நரசிம்மன், சதீஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக