மதுரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு!!


தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) சென்னையில்தொடங்கிவைக்கிறார். இதனை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 

2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும்

குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!