புதுக்கோட்டை மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபத்தின் கட்டுமான பணியினை அமைச்சர். மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாக தென்கிழக்கு மூலையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், புதுக்கோட்டை மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபத்தின் கட்டுமான பணியினை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர். எஸ்.ரகுபதி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர். மு.பெ.சாமிநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர். மு.அருணா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதுக்கோட்டை மாவட்டம், மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று 22.06.2025 அறிவித்தார்கள்அந்த வகையில், புதுக்கோட்டை மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபத்தின் கட்டுமான பணி ரூ.3,02,15,536 மதிப்பீட்டில் 760.50 சதுர மீட்டரில் நடைபெற்று வருவதை இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பணியானது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் நினைவு மணிமண்டப ஜன்னல் மேல்மட்ட கம்பி கட்டும் பணி நடைபெற்று வருவதை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
புதுக்கோட்டை மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபமானது, மன்னர் இராஜகோபால தொண்டைமான் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைப்பதற்கான கண்ணாடி கதவுகள் பொருத்திய காட்சியகம், 530 நபர்கள் அமருவதற்கான கூட்ட அரங்கம், முக்கிய விருந்தினர் மற்றும் அரங்கில் கலந்துகொள்பவர்கள் பயன்படுத்துவதற்கான ஓய்விடங்கள் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், இப்பணியினை தொடர்புடைய அரசு அலுவலர்கள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர். பெ.சாமிநாதன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, தலைமையில் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர். திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள். மரு.வை.முத்துராஜா, (புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை அவர்கள் (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர். கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.திருமால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். க.பிரேமலதா, உதவி செயற்பொறியாளர். கணேஷன், உதவிப் பொறியாளர். ரமேஷ்குமார், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் ஸ்ரீராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிதைப் பித்தன், கார்த்திக் தொண்டைமான், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர். தவ.பாஞ்சாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர். த.சந்திரசேகரன் மற்றும் கே.ஆர்.என். போஸ், சந்திரன், ராமச்சந்திரன், பூங்குடிசிவா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக