குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா!!
கன்னியாகுமரிமாவட்டம்,கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில், 1999-ல் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரி 1, 2000 அன்று அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது; இந்திய சிற்பி வி. கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலை, 38 அடி உயர பீடத்தில், கடலின் நடுவே அமைக்கப்பட்டு, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் விஸ்வகர்மாவின் படைப்புத் தொழிலை போற்றுவதாகவும் காணப்படுகிறது. மேலும் இது தமிழர் பெருமையின் சின்னமாக விளங்குகிறது. சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த ஐயன் திருவள்ளுவருக்கு நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வானுயர்ச்சியலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது ஜனவரி 1 2026 முதல் 26 ஆம் ஆண்டு தொடங்குகிறது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 வெள்ளி விழா நடைபெற்றது *.Statue of* *Wisdom* என போற்றப்படுகிறது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக