ராணிப்பேட்டையில் நடைபெற்ற "நம்ம ஊரு மோடி பொங்கல்" பிஜேபியினர் கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத் தலைவர். ஆனந்தன், நகர தலைவர். தீபா, முகுந்தன் ,சம்பத் ஆகியோர் பங்கேற்று கரும்பு ,மஞ்சள்,. ஆகிய படைத்து பானை வைத்து பொங்கல் வைத்து புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் நம்ம ஊரு மோடி பொங்கல் என கோசமிட்டவாரு பொங்கல் செய்து வழிபட்டனர். அப்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக