ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது ஜனவரி மாதம் 24ல் கரூரில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பது என்றும் மாநில அளவில் பல்வேறு ஓய்வு பெற்ற இயக்கங்களுடன் இணைந்து செயலாற்றுவது என்ற மாநில முடிவினை ஏற்று செயல்படுத்துவோம் என்றார்.
முன்னதாக மாவட்ட செயலாளர். ஜி.ஆறுமுகம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜி.விநாயகம், ஜி.ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள். இல.சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
ஆசிரியர் இல்லத்தின் பொதுச்செயலாளர் டி.செல்வமுத்து சங்கத்தின் 2016ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாட்காட்டி மற்றும் குறிப்பேடுகளை வெளிட்டார் நிர்வாகிகள் பெற்றுக்கொண்ட்னர்.
காட்பாடி கிளை தலைவர். பி.ஆசீர்வாதம், செயலாளர். பி.ஜெகன்நாதன், டி.மோகனவேலு, கே.வி.குப்பம் கிளை தலைவர். பி.ஜாகிர் அகமது, செயலாளர். எம்.விஜயகுமார், பொருளாளர் ஜி.குமார் வேலூர் கிளை பொருளாளர். சு.சோமாஸ்கந்தன், வி.பாலச்சந்தர், ஆர்.மகாலிங்கம் டி.தேவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொகையினை பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
3.80 வயது துவங்கும் போதே கூடுதல் ஓய்வூதியர் 20 சதவிகிதம் வழங்க வேண்டும்
4.மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1000 மருத்துவபடி வழங்க வேண்டும்
5.மூத்த குடிமக்களுக்கு இரத்து செய்யப்பட்ட இரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.
6.அரசு பேருந்துகளில் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர வேண்டும்
7.மாநிலக்கணக்காயரால் ஓய்வூதியம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு 7மாதங்கள் கடந்த பின்னரும் வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியின் ஓயவுபெற்ற உடற்கல்வி இயக்குநர்.நெப்போலியன் அவர்களுக்கு அப் பள்ளியின் தலைமையாசிரியரால் ஓய்வூதியம் பெற ஆணைகள் வழங்கப்படாத நிலையினை இக் கூட்டம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது. மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையீடு செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் இணை செயலாளர். கே.சேகர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக