நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம்!!


நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் - பேராசிரியர் கூட்டரங்கில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் அவர்களின் தலைமையில் மாண்புமிகு. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கழகத் தலைவர் மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க 14.01.2026 மற்றும் 15.01.2026 நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், வார்டுகளில் "திராவிட பொங்கல்" வைத்து சிறப்பாக கொண்டடுவது குறித்தும்,

16.01.2026 மற்றும் 17.01.2026 தேதி உழவர் திருநாள் காணும் பொங்கல் விழாவினை ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் பொது இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி திரை திருவிழாவை நடத்துவது குறித்தும்,

2026 புதியதாக வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் படி BLA2, BLC மறுசீரமைத்தல் குறித்தும், கழக ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

நிகழ்வில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் திருமதி.ராணி, மாநகராட்சி மேயர் திரு.து.கலாநிதி அவர்கள்,தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர். கனிமொழி,மாநில தீர்மான குழு  துணை தலைவர் பார். இளங்கோவன், தொகுதிப் பார்வையாளர்கள்.முனைவர் ஜான், ரேகா பிரியதர்ஷிணி,மாநில இளைஞர் அணி துணை செயலாளர். ஆனந்தகுமார்,மாநில மருத்துவர் அணி துணை செயலாளர். இராஜேஸ்பாபு, ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட,மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், நகர்மன்ற,பேரூர் மன்ற தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!