சமத்துவத்தின் நேரடி சாட்சி பெருமுளை சூரியப் பொங்கல்!ஊர் கூடி கொண்டாடிய ஒற்றுமை விழா!!

சமூக சமத்துவத்தின் அடையாளமாக திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருமுளை கிராமத்தில், சூரியன் பொங்கல் திருநாள் சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், ஜாதி–மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊர்க் கோயில் முன்பாக பொங்கல் வைத்தனர். பெண்கள் இருபுறமும் வரிசையாக நின்று பொங்கலிட்ட காட்சி, ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது.

பொங்கல் சமைத்த பின், அதனை இறைவனுக்குப் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்புடன் பொங்கல் பரிமாறப்பட்டதுடன், கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் இச்சமூக சமத்துவப் பொங்கல் விழா, இவ்வட்டாரத்திற்கே முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!