முல்லைப் பெரியாறு நீர்மட்டம் குறைவு!!


தேனி மாவட்டம், கூடலுார் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் 2025 நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நவ.27ல் 140.20 அடியை எட்டியது. அதன்பின் மழை குறைந்து நீர்வரத்தும் குறையகடந்த ஒரு மாதமாக மழையின்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 131.70 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடியாக இருந்தது. லோயர்கேம்ப் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை தேடும் பணிக்காக அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 5094 மில்லியன் கன அடியாகும்.


தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!