தேனி:க.புதுப்பட்டி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நபர்!!

தேனி:க.புதுப்பட்டி அருகே கட்டிட வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி குமார் தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் குமாரை கடையின் மேல் மாடியிலிருந்து கீழே இறக்கினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அவ்வழியாக சென்ற வாகனத்தின் மூலம் காயமடைந்த குமாரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணையில், காயமடைந்தவர் தேனி பகுதியே சேர்ந்த குமார் என்று கூறினர்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!