இன்று முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு தொடக்கம்!!

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க    https: madurai.nic.in/jallikattu/ இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும்.

முன்பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியானவர்களுக்கு டோக்கன் தரப்படும்.

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15, பாலமேடு ஜனவரி 16, அலங்காநல்லூரில் ஜனவரி 17இல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!