ஆற்காடு ஜெயா மருத்துவமனையில் பொங்கல் விழா சிறப்பு கொண்டாட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் செயல்பட்டு வரும் ஜெயா மருத்துவமனையில் பொங்கல் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மருத்துவமனையின் தலைவரும், திமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மருத்துவர் அணி  அமைப்பாளருமான டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார்; அவரது துணைவியார் ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தார். விழாவில் சூரிய பகவானுக்குப் புதுப் பானையில் பொங்கலிட்டு, "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு வழிபாடு செய்த நிலையில், புத்தாடை அணிந்து பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு அறுசுவை உணவருந்தி மகிழ்ந்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!