எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் பின்னடைவு இல்லை எங்களுக்கு முன்னடைவு தான் புதுக்கோட்டையில் அமைச்சர். ரகுபதி பேட்டி!!
புதுக்கோட்டையில் இயற்கை வழங்கல் துறை அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி:
எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் பேஸ்ட் காபி. திமுகவால் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி இன்று 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறியதில் இருந்தே மகளிர்க்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர். மு. க. ஸ்டாலினுக்குள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது, எடப்பாடி பழனிச்சாமி வந்தால் நிச்சயம் மகளிர் காண ஆயிரம் ரூபாய் தொகையை நிறுத்தி விடுவார் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் பின்னடைவு இல்லை எங்களுக்கு முன்னடைவு தான். எங்கள் திட்டத்தைதான் காபி பேஸ்ட் பண்ணி உள்ளார். அதைத்தான் எதிரொலித்துள்ளார் அந்த திட்டம் மக்களிடம் சென்றுள்ளது நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதை அவர் அறிவித்த திட்டங்கள் மூலம் தனது வாயால் ஒப்புக்கொண்டுள்ளார். இது திராவிட மடல் ஆட்சி 2.0வுக்கு வரவேற்பை தருகின்ற அறிவிப்பாகத்தான் இருக்குமே தவிர எங்களைப் பொறுத்தவரை எந்த பின்னடைவும் கிடையாது. எங்கள் தலைவருக்கும் கூட்டணிக்கும் இது மிகப்பெரிய வெற்றியைத் தரும்.
தேர்தல் வரவில்லை தேர்தல் தேதி அறிவிக்கவில்லை எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். இன்று அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல தனக்கு எடை போட்டு வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓடிப் போய் உள்ளார் ஆனால் அங்கு பந்தியே போடவில்லை அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டிடிவி தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார் யார் அந்த டிடிவி தினகரன் அவருக்கு அரசியலே தெரியாது. ஏதோ ஒரு ஃபுலூக்கில் வந்து சேர்ந்தார் அவர் ஒன்றும் கூற முடியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம் நிச்சயம் திமுக தனித்து ஆட்சி அமைக்கும். புதுக்கோட்டையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர். ரகுபதி பேட்டி:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு 3 கோடி 2 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர். ரகுபதி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள். முத்துராஜா, சின்னத்துரை மாநகராட்சி மெய்யர். திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மணிமண்டபம் கட்டும் பணி வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர். ரகுபதி கூறுகையில்!..
எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் பேஸ்ட் காபி. கடந்த தேர்தலின் போது
மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிப்பதை மகளிர்க்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று திமுக கூறியுள்ளது என்று சொன்ன வாய்தான் எடப்பாடி பழனிச்சாமியின் வாய்.
அவர் இன்று
பொய்பாடி பழனிச்சாமியாக மாறி இருக்கிறார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர் இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிர்க்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்குள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது.
அன்றைய தினம் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.
எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்ப மாட்டார்கள். 2019 தேர்தலுக்கு முன்னால் 60 லட்சம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்களுக்கு மாதம் 2000 ரூபாய் தருகிறேன் என்று சொன்ன வாய்தான் எடப்பாடி பழனிச்சாமியின் வாய். போய் பாடி பழனிச்சாமி 32 குடும்பங்களுக்கு ஒன்னேகால் கோடி ரூபாய் செலவில் ஒரே மாதம் மட்டும் கொடுத்தார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தேர்தல் வந்துவிட்டது என்று கூறி அந்த தொகையையும் நிறுத்திவிட்டால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி.
அப்படி திறமை இல்லாமல் இருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திறமையாக வாக்குறுதி நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். மக்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். மக்கள் அதை நம்ப இளிச்சவாயர்கள் அல்ல.
தற்போது கொடுக்கும் ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு தாய்மார்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு வருகின்றனர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்து வழங்குவதும் வழங்காததும் தமிழ்நாடு முதலமைச்சர் கையில் உள்ளது. இந்த ஆயிரம் ரூபாய் தொடர்ந்து கிடைத்தால் போதும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி வந்தால் நிச்சயம் இந்த தொகையை நிறுத்தி விடுவார் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே தேர்தல் அறிவிப்புகளை அறிவித்துள்ளதால் பின்னடைவு இல்லை எங்களுக்கு முன்னடைவு தான். எங்கள் திட்டத்தைதான் காபி பேஸ்ட் பண்ணி உள்ளார். அதைத்தான் எதிரொலித்துள்ளார் அந்த திட்டம் மக்களிடம் சென்றுள்ளது நாங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதை அவர் அறிவித்த திட்டங்கள் மூலம் தனது வாயால் ஒப்புக்கொண்டுள்ளார். இது திராவிட மடல் ஆட்சி 2.0வுக்கு வரவேற்பை தருகின்ற அறிவிப்பாகத்தான் இருக்குமே தவிர எங்களைப் பொறுத்தவரை எந்த பின்னடைவும் கிடையாது. எங்கள் தலைவருக்கும் கூட்டணிக்கும் இது மிகப்பெரிய வெற்றியைத் தரும்.
எடப்பாடி பழனிச்சாமி சொல்றதை செய்ய மாட்டார் ஆனால் நாங்கள் சொன்னால் செய்வோம் செய்தால் சொல்வோம்.
தேர்தல் வரவில்லை தேர்தல் தேதி அறிவிக்கவில்லை எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். இன்று அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல தனக்கு எடை போட்டு வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓடிப் போய் உள்ளார் ஆனால் அங்கு பந்தியே போடவில்லை அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்.
எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது எடப்பாடியின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.
சிறந்த மாடுபிடி வீரர் என்பது மூன்று நான்கு பேர் தான் வரப்போகிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுப்பது சிரமமான வேலை அல்ல. அது சாத்தியமான ஒன்று.
ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள் அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது. இந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார் அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.
வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டிடிவி தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார் யார் அந்த டிடிவி தினகரன் அவருக்கு அரசியலே தெரியாது. ஏதோ ஒரு ஃபுலூக்கில் வந்து சேர்ந்தார் அவர் ஒன்றும் கூற முடியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம் நிச்சயம் திமுக தனித்து ஆட்சி அமைக்கும்.
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி:
மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்பட்ட தொய்வு நிச்சயம் சரி செய்யப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை வரலாற்றில் இதுவரை தமிழ் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது ஆனால் தற்பொழுது உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது, இடையில் பத்தாண்டு காலம் ஏற்பட்ட தொய்வின் காரணமாக நிர்வாகத்தை சீர் செய்ய இன்னும் ஐந்தாண்டு காலம் குறைந்தது தேவைப்படுகின்ற சூழ்நிலையில் விரைவில் வரக்கூடிய தேர்தலில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பொறுப்பேற்று தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்பட்ட தொய்வு நிச்சயம் சரி செய்யப்படும்.
தமிழில் பெயர் பலகை என்பது முழுமையாக இன்னும் செயல் படுத்தவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறை இணைந்து பேசியிலும் வணிகர்கள் சங்கத்திலும் அழைத்துப் பேசி உள்ளோம் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். சட்டப்படி என்பதை விட படிப்படியாக தமிழ் பெயர் பலகை வைக்க மனப்பூர்வமான சம்மதத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதிலும் தமிழ் வளர்ச்சித் துறை வெற்றியடையும்
தேர்தல் நேரத்தில் மோடி அமித்ஷா தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் அரசியல். புதுக்கோட்டையில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர். சாமிநாதன் பேட்டி:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு 3 கோடி 2 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர். ரகுபதி, தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர். சுவாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தமிழர் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர். சாமிநாதன் கூறுகையில்.
தமிழ் வளர்ச்சி துறை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர். கருணாநிதி காலத்தில் தான் முன்னெடுக்கப்பட்டது. அதைவிட கூடுதலாக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஊக்கப்படுத்தி சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறார். தமிழ் வளர்ச்சித் துறை வரலாற்றில் இதுவரை தமிழ் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது ஆனால் தற்பொழுது உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பணியில் சேர்வதற்கு குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முடிந்த அளவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறோம். திருக்குறளை முன்னெடுத்து திருக்குறள் வாரம் என்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி அறிவித்தார். அதுவும் பள்ளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் மத்திய கல்வி உள்ள பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையில் காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அரசு ஊராட்சி நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடையில் பத்தாண்டு காலம் ஏற்பட்ட தொய்வின் காரணமாக நிர்வாகத்தை சீர் செய்ய இன்னும் ஐந்தாண்டு காலம் குறைந்தது தேவைப்படுகின்ற சூழ்நிலையில் விரைவில் வரக்கூடிய தேர்தலில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பொறுப்பேற்று தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்பட்ட தொய்வு நிச்சயம் சரி செய்யப்படும்.
பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி முயற்சி எடுத்தார்களோ அதே போல் தமிழ் வளர்ச்சி துறைக்கும் முயற்சி எடுத்து சிறந்த முறையில் கொண்டு செல்வார்கள். மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு அனைத்திலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வரக்கூடிய ஐந்தாண்டு காலமும் சிறப்பான ஆட்சியாக அமையும்.
தமிழில் பெயர் பலகை என்பது முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறை இணைந்து பேசியிலும் வணிகர்கள் சங்கத்திலும் அழைத்துப் பேசி உள்ளோம் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். சட்டப்படி என்பதை விட படிப்படியாக தமிழ் பெயர் பலகை வைக்க மனப்பூர்வமான சம்மதத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதிலும் தமிழ் வளர்ச்சித் துறை வெற்றியடையும்
தேர்தல் நேரத்தில் மோடி ,அமித்ஷா தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் அரசியல் என்று தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக