பொன்னமராவதி அருகே தேனூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் பி கே வைரமுத்து பங்கேற்பு -ஜமாத் சார்பில் பிகே.வைரமுத்துவுக்கு சிறப்பான வரவேற்பு !!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூரில் மஸ்ஜித் அலி இக்லாஸ் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும் பி.கே. வைரமுத்து கலந்துகொண்டு நிதி வழங்கினார். பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளருக்கு ஜமாத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகியும்,தொழிலதிபருமான பிகே.வி.குமாரசாமி, பொன்னமராவதி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர். காசி.கண்ணப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர். ஆலவயல் சரவணன்,அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன், அதிமுக மாவட்ட பாசறை செயலாளர். குழிபிறை பாண்டியன்,கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மாரிமுத்து, மாவட் ட சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் நிசார் அலி, மாவட்ட பாசறைத் துணை தலைவர். ஆகாஷ் சோழகர், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர். சந்திரன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக