புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி புனித விண்ணோற்பு அன்னை ஆலயத்தின் கிறிஸ்மஸ் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்!!

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாட்டின் முதல் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட புனித விண்ணோற்பு அன்னை ஆலயத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விழாவினை முன்னிட்டு  தச்சங்குறிச்சி பகுதியில் இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலில் உறுதிமொழி ஏற்று பின் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர் இப் போட்டியினை கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். சிவ வீ மெய்ய நாதன் மாவட்ட ஆட்சியர். அருணா திமுக வடக்கு மாவட்ட செயலாளர். கே. கே. செல்லபாண்டியன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர். சின்னத்துரை மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தனர். போட்டியில் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கு பெற்று ஒவ்வொரு சுற்றிருக்கும் 50 மாடுபிடி வீரர்கள் மற்றும் 100 காளைகளும்  வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வரும் காளைகளை அடக்கி பிடித்தனர் இப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரொக்க தொகைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன போட்டியினை கண்டு ரசிப்பதற்காக புதுக்கோட்டை கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களினால் அதிகமான பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!