புதுக்கோட்டை - மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கம்!!


புதுக்கோட்டை மாவட்டம்,  இலுப்பூர் தாலுகா, மேட்டுச்சாலையில் அமைந்துள்ள மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், " பொது அறிவியல், பொறியியல் மற்றும் கணினி முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகள்" என்ற தலைப்பில்  பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில்,  கல்விக் குழும நிறுவனர்  திருமிகு.இரா.சின்னத்தம்பி தலைமை வகித்து,  சிறப்பித்தார்.  நிகழ்ச்சிக்கு,  கல்வி குழுமத் தலைவர் திருமிகு.RC. உதயகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.   இதில்,  காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன, மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள் பிரிவின்,  முதன்மை விஞ்ஞானி முனைவர் M.சதீஷ்,  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மின்கலங்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.  அவர்தம் உரையில்,  மின்கலங்கள் பற்றிய அடிப்படை கருத்துகளையும்,  வகைகளையும் எடுத்துக் கூறினார். அதன்படி,  மின்கலங்களை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்கலங்களாக பிரிக்கலாம், முதன்மை மின்கலம் என்பது,  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.  இதனை மீண்டும் செயல்பட வைக்க முடியாது.  ஆனால் இரண்டாம் நிலை மின்கலத்தை,  அதில் உள்ள சக்தி குறைந்தாலும் புதுப்பித்துக் கொண்டு,  மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என்றும்,  மின்கலம் உபயோகத்தினால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.  அதுமட்டுமல்லாது,  எதிர்காலத்தில் மின்கலங்கள்  செயல்படப் போகும்  விதங்களைப்  பற்றியும் நன்றாக எடுத்துக் கூறினார். இறுதியில்   மாணவர்களின் கேள்விகளுக்கு  விடை அளித்தார்.  

இந்நிகழ்ச்சியில்,  கல்விக்குழுமம் இயக்குனர் முனைவர். மா.பூங்குன்றன்,  பதிவாளர் பேராசிரியர்   மு.தினேஷ் குமார் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.சு.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில்  முன்னதாக,  கல்லூரி அகத் தர உறுதிக் குழு  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் M.அய்யாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.  முதலாம் ஆண்டு துறைத்  தலைவர் முனைவர்.சி.முத்துக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.  கல்லூரி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்  துறை ஒருங்கிணைப்பாளர்,  முனைவர்.R.முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார்.  ஜெர்மனியிலிருந்து வந்திருந்த. ஜெர்னே லிவின் மிகன் மற்றும் செல்வி. ஜோஸ்பின் மரியா கபிரியேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்து கொண்டு,  மாணவர்களுக்கு கணினியின் வளர்ச்சிப்  பற்றி எடுத்துரைத்தனர்.  நாகப்பட்டினம்,  கலிலியோ வாசன் நீர்நிலை ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்,  பொறியாளர்.M.ஸ்ரீனவாசன்,  கடல் பாசியிலிருந்து  உயிர் எரிபொருள் உற்பத்தி" என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டார்.  இந்தப் பன்னாட்டு கருத்தரங்கில் 120 ஆய்வுக் கட்டுரைகள்  பெறப்பட்டு, புத்தகமாக அச்சிடப்பட்டு,  இதைக்  கல்வி குழுமத்  தலைவர் வெளியிட,  முதல் பிரதியை, சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில், சுமார் 200 பங்கேற்பாளர்கள்,   பிற கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வந்திருந்தனர்.  இந்தப் பன்னாட்டு கருத்தரங்கமானது,  ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது என்று கூறலாம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியரான திரு.க.ரவிக்குமார் தலைமையிலான மாணவர்கள் குழு தொகுத்து வழங்கியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,  அனைத்து  துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!