புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா!!


புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்தபின் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மற்றும் அனைத்து நீதிபதிகளும் கலந்துகொண்டனர். அரசு வழக்கறிஞர். வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க தலைவர். முத்தையன், செயலாளர். ரமேஷ், துணைத் தலைவர்கள். சுஜாதா, ராமராஜன், சீனியர் வழக்கறிஞர்கள். Acs என்ற சந்திரசேகர், அ.முருகேசன், மதியழகன், ரவிச்சந்திரன், தர்மராசன், வெங்கடாசலம், பெருமாநாடு பாலு, தாஞ்சூர் கணேசன், கே.எம் குமார், பூர்ணசந்திரன், பரமசிவம், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வழக்கறி சங்கத்தில் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கத்தின் முன்பு நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள்கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!