ஜெய துர்கா டெக்ஸ் பார்க் சிறிய அளவிலான ஜவுளி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் பெருமக்கள்!!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், அசநல்லிபாளையம் கிராமத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர். மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் ஜெயதுர்கா டெக்ஸ் பார்க் லிமிடெட் சிறிய அளவிலான ஜவுளி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
உடன் துணிநூல் துறை ஆணையர். இரா.லலிதா இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். டாக்டர். மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள், மேயர். ந.தினேஷ்குமார் அவர்கள், திருப்பூர் மண்டல துணிநூல் துணை இயக்குநர். செ.தமிழ்செல்வி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக