நெமிலி ஒன்றியத்தில் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு பயிற்சி - ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு பங்கேற்பு!!
ராணிப்பேட்டைமாவட்டம்,தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை கேட்டறியும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37,444 குடும்பங்களில் மொத்தம் 101 தன்னார்வலர்கள், கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். ஒரு தன்னார்வலருக்கு சுமார் 500 குடும்பங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் இத்திட்டத்தின் தன்னார்வலர்களாக பணியாற்ற உள்ளனர். இந்த தன்னார்வலர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 குடும்பங்களை சந்திக்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு குடும்பமாக நேரில் சந்திக்கும்போது தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், எந்தெந்த திட்டத்தில் மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரித்து, உரிய படிவத்தில் பூர்த்தி செய்யும் பணி நடைபெற உள்ளது. மேலும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், மக்களை அதிகம் கவர்ந்த மூன்று திட்டங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அந்த தகவல்களை படிவத்தில் பூர்த்தி செய்ய உள்ளனர். மேலும் வருங்காலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டமாக, தங்கள் மனதில் கனவாக நினைத்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களையும், கோரிக்கைகளையும் பொதுமக்களிடம் கேட்டறிந்து, அந்த விவரங்களையும் சேகரிக்க உள்ளனர்.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சிக் கூட்டம், இன்று நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், வட்டார இயக்க மேலாளர்,அலமேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக.
இத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்களோ, அந்த நோக்கத்தை 100% முழுமையாக பூர்த்தி செய்கின்ற அளவில், தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு தன்மையோடும், முழு ஈடுபாட்டோடு பொதுமக்களை சந்தித்து, சரியான தகவல்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு புரிகின்ற வகையில் அரசின் திட்டங்களை பற்றி கேட்டறிந்து, உரிய விவரங்களை சேகரிக்கவும், உண்மையான தகவல்களை பெற்று நிர்வாகத்திற்கு உரிய காலத்தில் வழங்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இத்திட்டத்தை, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மிகச் சரியாகவும், சிறப்பாகவும் செய்து முடித்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் வகையில், தங்களது பணிகள் அமைய வேண்டுமென, தன்னார்வலர்களை ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் தன்னார்வலர்களுக்கு குடும்பங்கள் வாரியாக கணக்கெடுக்கும் படிவங்களை வழங்கினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக