தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நத்தத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் திருவிழா!!

திண்டுக்கல் மாவட்டம்,தமிழர் பாராம்பரிய ஜல்லிகட்டு விளையாட்டுக்கு தடை விதித்த பீட்டா அமைப்பை எதிர்த்து மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ - மாணவியர், இளைஞர்கள், முற்போக்குவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்ச் சமூகமும் ஆர்த்தெழுந்து உலகை  தமிழ் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளவும், தமிழர்களின் பண்பாடு பற்றி வெளிப்படுத்திய அமைதிப் போராட்டம், அறவழிப் போராட்டம் மூலம் ஜல்லிகட்டு காளையையும், நாட்டு மாடுகளையும் மீட்டெடுத்த நமது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அடையாளத்தை மீட்டெடுத்த முகமலர்ச்சியோடு தமிழ் உணர்வாளர்கள் பங்கு பெறும் வகையில் ஆண்டு தோறும்

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர் கலாச்சார குழு சார்பில் விட்டுப் போகாது தமிழன் வீரியமும், வீரமும்...!! தமிழன்டா, புறமுதுகு காட்டாத போராட்டம் எங்கள் பாரம்பரியம் என்பதை பறை சாற்றும் வகையில் 9-ம் ஆண்டு ஜல்லிகட்டு காளைகள் திருவிழா நடந்தது. 

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதை வளர்ப்போருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி மதிப்பளிக்கும் வகையில் காளைகளுக்கு வேஷ்டி, துண்டு போன்றவைகளை அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தனர். இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ராக்கன், தமிழ்முகம் அமைப்பாளர் அய்யனார், நிர்வாகிகள் முன்னாள் புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம், பிரியம் ஜின்னா, பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!