ஆற்காட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவு நாள் வீரவணக்கம் பொதுக்கூட்டம்!!

ஆற்காடு நகரில், தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் அண்ணா சிலை அருகே வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர். எம்.சி. விஜய் ஆனந்த் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

நகர அவைத் தலைவர் புருஷோத்தமன், நகர இளைஞரணி செயலாளர். எச். கண்மணி, நகர துணைச் செயலாளர். சதர் பாஷா, குணபூஷணம், வேதா, நகரப் பொருளாளர். ஜெயந்திலால், மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமுத்து, உதயகுமார், ஜூலிஸ் மேரி, பீட்டர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ஆற்காடு நகர செயலாளர். ஜிம். சங்கர், சொரையூர் குமார், அன்பழகன், வாலாஜா நகர செயலாளர். டபிள்யூ.ஜி. மோகன், விசாரம் நகர செயலாளர். இப்ராஹிம் கலிலுல்லா ஆகியோரும் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செஞ்சி நா. ராமச்சந்திரன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர். எஸ்.எம். சுகுமார், வி.கே.ஆர். சீனிவாசன், கழக மகளிர் அணி துணைச் செயலாளர். நூர்ஜஹான், சுமைதாங்கி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!