திருமயம் அருகே இளஞ்சாவூர் மகமாயிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சள் விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற நடைபெற்ற கும்பாபிஷேகம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே இளஞ்சாவூர் மகமாயிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சள் விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இளஞ்சாவூர் மகமாயிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சள் விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு . கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 7ம் தேதி விநாயகர் பூஜை வழிபாட்டுடன் தொடங்கி பூர்வாங்க பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று முதல் கால யாக வேள்வி 1008 மூல மந்திரமும் வேத பாராயனமும் நடைபெற்று இரண்டாம் கால யாக பூஜையும் தொடர்ந்து அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரபூஜை, அனுஞ்ஞை,கோபூஜை, வேத பாராயணம்,பூர்ணாஹுதி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து கும்பாபிஷேகம் கருட பகவான் கோயிலை வட்டமிட சர்வ சாதகம் விஸ்வநாத சிவாச்சாரியார் மேற்பார்வையில் கும்பத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். இளஞ்சாவூர் மகமாயிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழா நடைபெறுவதை யொட்டி திருமயம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக