புதுக்கோட்டை ஏவிசிசி கல்விக் குழுமத்தில் நடைபெற்ற வேண்டாம்! பிளாஸ்டிக் விழிப்புணர்வு வேண்டுகோளுடன் குழந்தைகள் மாறுவேடப்போட்டி!!
புதுக்கோட்டை மாவட்டம்!புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப்போட்டி பள்ளி தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் தலைமையில் நடைபெற்றது.
‘வேண்டாம்பிளாஸ்டிக்’என்கிற விழிப்புணர்வு வேண்டுகோளுடன் நடைபெற்ற இப்போட்டிகளுக்கு சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியை பானுமதி ராஜேந்திரன் ஓவிய ஆசிரியை தன்யா ஜெயராஜ்
ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து மதிப்பெண் வழங்கி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர். ஏவிசிசி கணேசன் பேசுகையில் பிளாஸ்டிக் வேண்டாம் என்கிற செய்தியை குழந்தைகள் பெற்றோர்களுக்கு சொல்வது போல நிகழ்ச்சி புதுமையாக அமைந்துள்ளதாக
பாராட்டு தெரிவித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக