அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டனர் -த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர். செங்கோட்டையன் பேட்டி!!..
கோவை விமான நிலையத்தில் த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் த.வெ.க உடன் பேசியதாக செய்தி பார்த்தேன். நல்லது நடக்கட்டும் என அவர் தெரிவித்தார்.
அண்ணாவை மறந்து விட்டதாக நடிகர். விஜய் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த செங்கோட்டையன்,“இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டனர். அம்மாவை மறந்தார்கள், தலைவர்களை மறந்தார்கள், அண்ணாவை மறந்தார்கள். அதனால் தான் நான் வெளியே வந்தேன். என் பாக்கெட்டில் இன்னும் அவர்களின் படம் இருக்கிறது. வளர்த்து விட்டவர்களை மறக்கக் கூடாது என்றார்.
மேலும்,நான் தலைவர், தலைவியுடன் பயணம் செய்தவன். சிறப்பான முறையில் ஆட்சியில் பங்கு கொண்டவன். என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னால், அதற்கான தீர்ப்பு உச்சநீதிமன்றம் வரை வழங்கப்பட்டுள்ளது.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது வழக்கு தொடரப்பட்டது. நான் தூய்மையானவன் என்பதற்கு நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. போக்குவரத்து கழகத்தில் என்னால் வருவாய் ஏற்பட்டுள்ளது என்பதே தீர்ப்பு.அதைவிடுத்து ஊழல் குற்றச்சாட்டு கூறினால், அதனை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் நான் சட்டப்படி வழக்கு தொடருவேன்”என கூறினார்.
டி.டி.வி தினகரன் குறித்து பேசிய அவர்,அவர் எங்களுடன் வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் தற்போது ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் எங்கு சென்றாலும் வாழ்க என்றார்.
மேலும்,நான் பேசும் விஷயங்கள் டெல்லியில் இருந்து கவனிக்கப்படுகின்றன. சில பிரச்சனைகள் எங்களுக்கு மட்டுமே தெரியும். அதை சொல்லாமல் இருப்பதே நல்லது” என்றும் குறிப்பிட்டார்.
ஓ.பி.எஸ் கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன்,எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் உயிருள்ள வரை முதல்வராக இருந்தார்” என்று கூறினார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக