ராணிப்பேட்டையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு விழா!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு, இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்  நடைபெற்ற விழாவில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜே.யு.சந்திர கலா, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். ஆயுதப்படை காவல் ஆய்வாளர். சதீஷ் அவர்கள் தலைமையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து, இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் 31 காவல்துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கமும், மேலும் சிறப்பாக பணிபுரிந்த 56காவல்துறை அதிகாரிகள்,  ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!