அரக்கோணம்:விபத்தில் பாதிக்கப்பட்ட திமுக கழக நிர்வாகிக்கு நிதி உதவி வழங்கிய ஒன்றிய செயலாளர்.கே. பசுபதி!!
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி மூகாம்பிகை நகர் BOOTH DIGITAL AGENT ( BDA) M.ராஜ்கமல் அவர்கள் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி அரக்கோணம் மத்திய ஒன்றிய கழக செயலாளர். கே.பசுபதி அவர்கள் பாதிக்கப்பட்ட ராஜ்கமல் அவர்களை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
உடன் முன்னாள் மாவட்ட துணை செயலாளர். N.ராஜ்குமார், ஒன்றிய அவை தலைவர். N.வேலு ஒன்றிய துணை செயலாளர். J.அன்பழகன், ஒன்றிய பொருளாளர் G.டில்லிபாபு, மாவட்ட பிரதிநிதி. S.வெங்கடேசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். G.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக