பென்னிக்குயிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனியில் நடைபெற்ற பொங்கல் விழா!!

தேனியில் பொங்கல் விழா எவ்வளவு சிறப்போ அதே போல் பென்னிக்குயிக் பிறந்தநாள் விழாவும் சிறப்பு!

வெள்ளைக்கார துரை!வரலாறு போற்றும் மாமேதை!மக்களை காக்க வந்த இரட்சகர்முல்லைப்பெரியாறு அணையின் தந்தைகர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் இன்று.கால் வயித்து கஞ்சி கூட இல்லாமல் பஞ்சத்திலும், வறுமையிலும் செத்துக் கொண்டிருந்தார்கள் தென் தமிழ்நாட்டின் சிவகங்கை, ராமநாதபுரம், ஒருங்கிணைந்த மதுரை (தேனி, திண்டுக்கல்லை உள்ளடக்கியது) மாவட்டங்களில் வசித்த மக்கள். பஞ்சத்தோடு தொற்றுநோய்களும் கைகோர்க்க கொத்துக் கொத்தாய் மக்கள் மடிந்தார்கள். வயித்துக்கே வழியில்லை. வரிக்கு கேட்பவனுக்கு எதைக் கொடுப்பது? 

வரி வருவாய் குறைந்ததால் கொதித்துப் போன ஆங்கிலேய அரசு காரணம் கண்டறிய அதிகாரிகளை நியமித்தது. மக்களிடம் நிலவும் பஞ்சமே காரணம் என தெரியவந்தது. பஞ்சத்தை போக்கினால் அடாவடித்தனம் செய்தாவது வரியை பிடுங்கிக் கொள்ளலாம் என்பது ஆங்கிலேய அரசின் எண்ணமானது. பஞ்சத்தை போக்குவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்த போது, "மேற்குத்தொடர்ச்சி மலையில் முல்லையாறு, பெரியாறு சங்கமித்து பாய்ந்தோடும் நதியை மறித்து தண்ணீரை எடுத்துக் கொண்டு வரலாம் என ஏற்கனவே ராமநாதபுரம் சேதுபதியால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டு போதிய நிதி ஆராதாரமின்றி கைவிடப்பட்ட முல்லைப்பெரியாறு அணை திட்டத்தை ஆங்கிலேய அரசு கையில் எடுத்தது.

அணை கட்டும் பொறுப்பை ஆங்கிலேய அரசின் தலைமை பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கிடம் ஒப்படைத்தது ஆங்கிலேய அரசு.

இரத்தத்தை வியர்வையாகவும், இரத்தமாகவும் மக்கள் சிந்தி கடும் உழைப்பில் அணை உருவாகிக் கொண்டு இருந்தது. எதிர்பாராத பேய்மழை. கட்டிய அணையை அரபிக் கடல் நோக்கி அடித்துச் சென்றது பெருவெள்ளம்.

அவ்வளவு தான் திட்டம், என ஆங்கிலேய அரசு கைவிரித்தது. அடுத்து நிதி எதுவும் கொடுக்க மறுத்தது அரசு.

     ஆனால், பென்னிகுயிக்கிற்கு பின்வாங்கும் மனநிலை இல்லை. அணைக்காக மக்களின் இரத்தம் சிந்திய அதே இடத்தில் மீண்டும் அணை கட்ட தீர்மானித்தார். பெரும் நிதி தேவைப்பட்டதால், இலண்டனில் இருந்த தனது சொத்துகளை விற்று அணை கட்டும் பணியை மீண்டும் தொடங்கினார். இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு பிரமாண்டமான அணையை கட்டி எழுப்பினார்.

   பென்னிகுயிக்கிற்கு தெரியும், இந்த அணை கட்டும் திட்டத்தில் அவரும் பின் வாங்கினால் இது எப்போதும், யாரும் இதை முயற்சிக்க மாட்டார்கள் என்று. ஆங்கிலேய அரசும் மீண்டும் இதைப் பற்றி சிந்திக்காது என்பதும் அவர் அறிந்ததே. 

அதனால் தான் அவர் சொன்னார், "இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்! இதனைத் தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில், மீண்டும் ஒரு முறை நான் இப்புவிக்கு வரப்போவதில்லை என்றார்.

அவர் சொன்னதோடு நிற்கவில்லை. அதை நிகழ்த்தியும் காட்டினார்.

ஆதலால், அவரை நம் மக்கள் கடவுளுக்கு நிகராக வழிபட்டு வருகின்றனர்.

"நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்"

இந்நிலத்தில் உம் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!