திருமயத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர். பர்வேஸ் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்களின் தொகுப்பை வழங்கினார்.முன்னதாக அவர் நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதுசமயம் நம்திருமயம் தொகுதியில் தவெக சார்பில் சிந்துராமசாமி களம் காணவிருக்கிறார். அவரை வெற்றிபெறச்செய்யவேண்டும்.செய்வீர்களா என கேட்டார்.அதுசமயம் எல்லாரும் சேர்ந்து வெற்றிபெறச்செய்வோம் என கோரசாக கூறினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பர்வேஸ் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தவெக வழங்கிய பொங்கல் பரிசுப்பையில் பச்சரிசி,வெல்லம்,பாசிப்பருப்பு, முந்திரி,உலர் திராட்சை யுடன் ஒரு முழுக்கரும்பும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக