சாலை பாதுகாப்பு வாரம் முன்னிட்டு வேலூர் - தமிழ்நாடு வட்டாரப் போக்கு வரத்து துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற தீ விபத்து குறித்த விழிப்புணர்வு!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் சாலை பாது காப்பு மாதம் முன்னிட்டு அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது குறித்து வேலூர் தீயணைப்பு துறையின ரால் செயல் விளக்கத்தை அளித்தனர். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர். முருகேசன் முன்னிலையில் வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர். ராஜ்குமார் செயல் விளக்கம் அளித்தார். இதில் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக