நமணசமுத்திரத்தில் நடைபெற்ற ‌சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அபிஷேக் குப்தா IPS அவர்கள் அறிவுறுத்தலின் படி சாலை பாதுகாப்பு  ஜனவரி மாதம் அனுசரிப்பதை தொடர்ந்து  ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நமணசமுத்திரம் காவல் நிலையம் சார்பாக லேணா விலக்கு மெளண்ட் சியோன் சி.பி.எஸ்.சி பள்ளி

 மாணவர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அணிவகுப்பு லேனாவிலக்கில்நடைபெற்றது.பொன்னமராவதி உதவி போலிஸ் கண்காணிப்பாளர். தங்கராமன்,  காவல் ஆய்வாளர்.உமாசங்கரிஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக பதாகைகள் ஏந்தியும், சாலை பாதுகாப்பு

 சம்பந்தமாக கோஷங்களை எழுப்பியும், சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் ஊர்வலமாக சென்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!