நத்தத்தில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு பற்றிய விழிப்புனவு!!

 

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளத்தில் படிக்கும் இளநிலை இறுதியாண்டு தோட்டக்கலை மாணவிகள், கிராம தோட்டக்கலை பணி அனுபவம் திட்டத்தின்கீழ் நத்தம்  சுற்றியுள்ள கிராமங்களில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, அசோலா எனும் நீர் செடி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 

அசோலா வளர்ப்பு என்பது குறைந்த செலவில் எளிதாக செய்யக்கூடிய பயனுள்ள முறையாகும். அரை நிழல் உள்ள இடத்தில் பாலித்தீன் தாள் விரித்த குழி அல்லது தொட்டியில் 10–15 செ.மீ உயரம் வரை தண்ணீர் நிரப்பி, அதில் மாட்டு சாணம் மற்றும் மண் கரைசலை சேர்த்து அசோலா விதையை விட வேண்டும். சரியான பராமரிப்பில் 10–15 நாட்களில் அசோலா வேகமாக வளர்ந்து தினசரி அறுவடைக்கு தயாராகும். இது மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து தீவனமாகவும், வயல்களுக்கு இயற்கை நைட்ரஜன் உரமாகவும் பயன்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!