கட்டுமாவடிக் கடல் ஓரத்தில் அய்யனார் சிலை!!


அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் கா. காளிதாஸ், சதீஷ்குமார் , லக்ஷ்மணன் , அன்பரசு ஆகியோர் கொண்ட வரலாற்று குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடற்கரைப் பகுதியில் உப்பளத்திற்கு அருகில் ஆய்வு மேற் கொண்ட பொழுது அய்யனார் சிலை ஒன்றைக் கண்டறிந்தனர். இது பற்றி வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது, கி.பி 17 மற்றும்18 -ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்த சமயம் மேலோங்கியிருந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமணம், ஆசீவகசமயம் ஆகியவை மேலோங்கிய வளர்ச்சிநிலையில் இருந்துள்ளன. ஐயனார் வழிபாடு என்பது ஆசீவக சமய வழிபாட்டு முறையாகும். 

இச்சிலையானது, ஒன்றரை அடி உயரமும் அரை அடி அகலமும் கொண்டது. இந்த ஐயனார் சிலை ஜடா மகுட  சடாபாரத்துடன் தலை முடி விரித்தபடி காதுகளிரண்டிலும் பத்திர குண்டலங்கள் அணிந்தும் கழுத்தில் ஆபரணங்களுடன் மார்பில் முப்புரி நூல்கொண்டும், இடையணியும் கச்சையும், பட்டுப்பீதாம்பரமும் அணிந்து, இரு கைகளிலும் கவுடர் என்னும் கைத்தண்டைக் காப்புகள் அணிந்தும் வலது காலை நீட்டியும் இடது காலை மடக்கியும், இடுப்பையும் இடது காலையும் இணைக்கும் நிட்டையோகப்பட்டை யணிந்தும் ;அமர்ந்த கோலத்தில் அபயகரத்துடன், வலது கையில் சாட்டையுடன்  அய்யனார் காட்சி தருகின்றார். இங்குள்ள கோயிலானது கடல் நீரில் மூழ்கியிருக்கக்கூடும்.இச் சிலை மட்டும் தங்கி யிருக்கக்கூடும் . இங்குள்ள மக்கள் தற்பொழுது சூலமும் நட்டுவைத்து வழிபடுகின்றனர். இந்த அய்யனார் சிலையை ஊர் மக்கள் அபயம் காத்த முனி என்று அழைத்து வழிபடுகின்றனர். காத்த முனி என்பது சாத்த முனியாக இருக்கலாம். சாத்தர் என்பது ஆசிவகக் கடவுளரின் பெயர்களில் ஒன்றாகும். இது போன்ற தொல்லியல் மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பது பொதுமக்களாகிய நமக்கும் நமது அரசுக்கும் உரிய கடமையாகும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!